/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆசிரியர்கள் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை ஆசிரியர்கள் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை
ஆசிரியர்கள் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை
ஆசிரியர்கள் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை
ஆசிரியர்கள் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவர் தற்கொலை
ADDED : ஜூன் 19, 2025 01:41 AM
ராஜபாளையம்:விருதுநகர்மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆசிரியர்கள் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் நடுத்தெரு குருசாமி மகன் கவின் குமார் 17. இங்கு அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இவர் பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்ததாக கூறி நேற்று ஆசிரியர்கள் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து கவின் குமாரை கண்டித்து அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் கவின் குமார் நேற்று மாலை அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இறந்தார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.