ADDED : ஜூன் 18, 2025 11:27 PM
காரியாபட்டி: காரியாபட்டி வடகரையில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டி தமிழர் தேசம் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம், மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் தலைமையில் நடந்தது.
பா.ஜ., மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம்வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத பட்டாசு ஆலைகள் மேல் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.