பட்டாசு பறிமுதல்
சிவகாசி: மேட்டூரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே மேட்டூர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இங்கு அனுமதியின்றி பட்டாசு வைக்கப்பட்டிருந்தது. ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 13 அட்டைப் பெட்டிகளில் இருந்த பட்டாசுகளை கிழக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
----மூதாட்டி தற்கொலை
சிவகாசி: சிவகாசி சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 70. இவர் தாழி குளத்துபட்டியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
நாய் குறுக்கே வந்ததால் டூவீலரில் சென்ற பெண் பலி
தளவாய்புரம்: தளவாய்புரம் அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பிரகாசி 45, இவர்களுக்கு இஸ்ரோ என்ற மகனும் ரூபி என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் பிரகாசி தனது மகனுடன் டூவீலரில் தளவாய்புரம் மீனாட்சிபுரம் ரோட்டில் சென்ற போது நாய் குறுக்கிட்டது. இதில் பின்னால் அமர்ந்திருந்து சென்ற பிரகாசி நிலைத்தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.