/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குண்டும் குழியுமான ரோடுகள், ஆற்றில் குப்பை விருதுநகர் 24வது வார்டு மக்கள் புலம்பல் குண்டும் குழியுமான ரோடுகள், ஆற்றில் குப்பை விருதுநகர் 24வது வார்டு மக்கள் புலம்பல்
குண்டும் குழியுமான ரோடுகள், ஆற்றில் குப்பை விருதுநகர் 24வது வார்டு மக்கள் புலம்பல்
குண்டும் குழியுமான ரோடுகள், ஆற்றில் குப்பை விருதுநகர் 24வது வார்டு மக்கள் புலம்பல்
குண்டும் குழியுமான ரோடுகள், ஆற்றில் குப்பை விருதுநகர் 24வது வார்டு மக்கள் புலம்பல்
ADDED : ஜூன் 13, 2025 02:41 AM

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி 24வது வார்டில் ரோடு, தெருவிளக்கு, வாறுகால் பிரச்னையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆற்றில் குப்பை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
இங்கு பாத்திமா நகர் மெயின் ரோடு, கிருஷ்ணமாச்சாரி ரோடு, பிள்ளையார் கோயில் தெரு, காளியம்மன் கோயில் தெரு, நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வார்டின் முக்கிய ரோடான பாத்திமா நகர் மெயின் ரோடு 450 மீ., நீளம், 60 அடி அகலம் கொண்டது. சாத்துார், சிவகாசி ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் கலெக்டர் அலுவலகம் செல்ல இந்த ரோட்டையே பயன்படுத்துவர்.
5 ஆண்டுகளுக்கு முன் ரோட்டின் இருபுறமும் குடிநீருக்கான குழாய் பதிக்கும் பணிகள் நடந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. நடுத்தெருவில் சிமென்ட் ரோடு பெயர்ந்துள்ளது. பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள சிறு பாலத்தில் கழிவுநீர் தேங்குகிறது. இப்பகுதி பஸ் ஸ்டாப் அருகே 20 ஆண்டுகள் பழமையான சுகாதார வளாகம் சேதமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
பாத்திமா நகர் மெயின் ரோட்டில் சிறிய விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால் போதிய வெளிச்சம் இல்லை. ரோட்டின் அகலத்திற்கு ஏற்றாற்போல் அதிக வெளிச்சம் தரக்கூடிய தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
வெளிச்சமில்லை
சூசைமேரி, குடும்பத்தலைவி: பஸ் ஸ்டாப்பில் தெருவிளக்கின்றி இருள் சூழ்ந்துள்ளது. பஸ்சிற்காக காத்திருப்போர் இருட்டில் நிற்பதால் அச்சம் நிலவுகிறது. சாத்துார் ரோடு சந்திப்பில் போதிய வெளிச்சம் இன்றி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதை தடுக்க உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்.
வாறுகால் அள்ள ஆளில்லை
ஜெயா, குடும்பத்தலைவி: பாத்திமா நகர் மெயின் ரோட்டில் இருபுறம் உள்ள வாறுகால் துார்வார ஆள் இன்றி கழிவுநீர் தேங்குகிறது. எனவே நிரந்தர துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்.
ஆற்றில் குப்பை
தெரசம்மாள், குடும்பத் தலைவி: பஸ் ஸ்டாப் பின்புறம் மழைநீர் வடிகால் தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளது. அதை சீர்செய்ய வேண்டும். குப்பையை சரிவர வாங்காததால் இப்பகுதி பொதுமக்கள் கவுசிகா ஆற்றில் கொட்டுகின்றனர். அதை தடுக்க வேலி அமைக்க வேண்டும்.