/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மை பணிகள் பாதிப்பு: நிதி ஒதுக்காததால் ஊதியம் இன்றி தவிப்பு மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மை பணிகள் பாதிப்பு: நிதி ஒதுக்காததால் ஊதியம் இன்றி தவிப்பு
மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மை பணிகள் பாதிப்பு: நிதி ஒதுக்காததால் ஊதியம் இன்றி தவிப்பு
மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மை பணிகள் பாதிப்பு: நிதி ஒதுக்காததால் ஊதியம் இன்றி தவிப்பு
மாநகராட்சி, நகராட்சிகளில் துாய்மை பணிகள் பாதிப்பு: நிதி ஒதுக்காததால் ஊதியம் இன்றி தவிப்பு
ADDED : ஜூன் 13, 2025 02:42 AM

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் துாய்மை பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டது. அதன்படி 2022 - 23 நிதியாண்டு முதல் துாய்மைப் பணி செய்ய தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடப்பட்டது.
துாய்மைப் பணி ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் வீடு, கடைகளில் குப்பை சேகரித்து தரம் பிரித்து ஒப்படைக்க வேண்டும். இதற்காக சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் குப்பை சேகரிக்க ஆண்டுக்கு ரூ.8.5 கோடிக்கும், ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியில் 33 வார்டுகளில் குப்பையை சேகரிக்க ஆண்டுக்கு ரூ.5 கோடி, ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகளில் குப்பை சேகரிக்க ஆண்டுக்கு ரூ.8.74 கோடிக்கு தனியார் நிறுவனங்கள் வசம் விடப்பட்டது.
துாய்மை பணி மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு பொது நிதி, மாநில நிதிக்குழு மானிய நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதி பணியாளர்கள் ஊதியம் மற்றும் பராமரிப்பு என இரு பிரிவுகளாக மாதம் தோறும் விடுவிக்கப்பட்டு வந்தது. இதில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பராமரிப்பு, உபகரணங்களுகான நிதி கடந்த ஓராண்டாக விடுவிக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் பணியாளர்களுக்கான ஊதியம் 6 மாதங்களாக விடுவிக்கப்படாமல் இருந்து வருகிறது. ஒப்பந்த நிறுவனம் சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் 5 மாதங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில் மே மாதத்திற்கான ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை.
இதனால் கடந்த இரு நாட்களாக பெரும்பாலான துாய்மை பணியாளர்கள் பணிக்கு வராததால் துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை தேங்கி உள்ளது. ஏற்கனவே பணிப்பாதுகாப்பு இல்லாமல் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததால் அடிப்படை தேவைகளுக்கு பணம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் துாய்மை பணியாளர்களுக்கான ஊதியத்தை உடனடியாக விடுவிக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும் என துாய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.