/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பள்ளி காம்பவுண்ட் சுவரில் மதுபாட்டில்களால் பெற்றோர் அதிருப்தி பள்ளி காம்பவுண்ட் சுவரில் மதுபாட்டில்களால் பெற்றோர் அதிருப்தி
பள்ளி காம்பவுண்ட் சுவரில் மதுபாட்டில்களால் பெற்றோர் அதிருப்தி
பள்ளி காம்பவுண்ட் சுவரில் மதுபாட்டில்களால் பெற்றோர் அதிருப்தி
பள்ளி காம்பவுண்ட் சுவரில் மதுபாட்டில்களால் பெற்றோர் அதிருப்தி
ADDED : செப் 04, 2025 03:51 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் காம்பவுண்ட் சுவற்றில் குடிமகன்கள் குடித்து விட்டு காலி மதுபாட்டில்களை வரிசையாக வைத்து செல்வதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பெரிய வள்ளிக்குளம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். பள்ளியை சுற்றி காம்பவுண்ட் சுவர் உள்ளது. அருகில் நூலகம் உள்ளது. மறைவான பகுதியாக இருப்பதால் இரவு நேரங்களில் குடிமகன்கள் நூலக கட்டடத்தில் அமர்ந்து குடித்து விட்டு காலி பாட்டில்களை பள்ளியின் காம்பவுண்டு சுவற்றில் வைத்து விடுகின்றனர்.
சிலர் பாட்டில்களை உடைத்து போடுகின்றனர். இதனால், பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் சங்கடப்படுகின்றனர். தூய்மை பணியாளர்கள் தினமும் மது பாட்டில்களை அப்புறப்படுத்துகின்றனர். போலீசார் இரவு நேர ரோந்து பணி செய்து பள்ளியின் காம்பவுண்ட் சுவற்றில் காலி மது பாட்டில்களை வைத்து அட்டகாசம் செய்யும் குடிமகன்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.