ADDED : செப் 04, 2025 03:51 AM
கலை நிகழ்ச்சி போட்டி
ராஜபாளையம் : ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா பெண்கள் கல்லுாரியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சி போட்டிகள் நடந்தன.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000 மாணவர்கள் பங்கேற்று நடனம், கவிதை, பாடல், குறும்படம், மெஹந்தி, ஓவியம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். விருதுநகர் வன்னியபெருமாள் கல்லுாரி முதலிடம், சிவகாசி மெப்கோ இன்ஜினியரிங் கல்லுாரி இரண்டாம் இடம், ஸ்ரீவில்லிபுத்துார் கலசலிங்கம் கல்லுாரி மூன்றாம் இடம் பிடித்தன. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி தாளாளர் கிருஷ்ணம ராஜூ தலைமை வகித்து பரிசு வழங்கினார். பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.