/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கண்மாயின் மறுபுறம் வீணாகுது குடிநீர் கண்மாயின் மறுபுறம் வீணாகுது குடிநீர்
கண்மாயின் மறுபுறம் வீணாகுது குடிநீர்
கண்மாயின் மறுபுறம் வீணாகுது குடிநீர்
கண்மாயின் மறுபுறம் வீணாகுது குடிநீர்
ADDED : ஜூன் 06, 2025 02:23 AM

விருதுநகர்: விருதுநகரில் கண்மாயின் மறுபுறம் பைப்லைன் உடைந்து மாதக்கணக்கில் குடிநீர் வீணாவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் அருகே ஓ.முத்துலாபுரத்தில் கண்மாய் உள்ளது. இதன் மறுபுறம் உள்ள பகுதியில் குடிநீர் பைப்லைன் மூலம் ஊராட்சிக்கு குடிநீர் வருகிறது.
இதில் லீக் உள்ளதால் குடிநீர் வரத்து குறைவாக உள்ளது. லீக் ஆகும் இடத்தில் மாதக்கணக்கில் தண்ணீர் வீணாகி வருகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பயனில்லை.
ஏற்கனவே இங்குள்ள கண்மாய் புதர்மண்டி, மடைகள் சேதமாகி காணப்படுகிறது.
ஊரகப் பகுதிகளில் நீர்மேலாண்மை செய்ய அரசு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை செயல்படுத்த முனைப்பு காட்டாத அதிகாரிகளினாலே இங்கு பற்றாக்குறை உள்ளது. எனவே வீணாகும் குடிநீரை சீராக்க பைப்லைன் பழுதை சரிப்படுத்த வேண்டும்.