/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நம்பர் பிளேட்டில் பெயர்கள் படங்கள் வைப்பது அதிகரிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள் நம்பர் பிளேட்டில் பெயர்கள் படங்கள் வைப்பது அதிகரிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
நம்பர் பிளேட்டில் பெயர்கள் படங்கள் வைப்பது அதிகரிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
நம்பர் பிளேட்டில் பெயர்கள் படங்கள் வைப்பது அதிகரிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
நம்பர் பிளேட்டில் பெயர்கள் படங்கள் வைப்பது அதிகரிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : ஜூன் 06, 2025 02:23 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நம்பர் பிளேட்டான வாகன எண்கள் பலகையில் பெயர்கள், படங்களை ஒட்டி விதி மீறலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. கட்டுக்கடங்காத அலட்சியமே இதற்கு காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மாவட்டத்தில் நம்பர் பிளேட்டான வாகன எண்கள் பலகையில் பெயர்கள், படங்கள், ஜாதிய ஸ்டிக்கர்கள் ஒட்டுவது அதிகரித்துள்ளது.
நம்பர் பிளேட்டில் பெயர்கள் எழுதுவது அல்லது தனிப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டுவது சட்டப்படி தவறானது. இது அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றம். நம்பர் பிளேட்டில் வாகனப் பதிவு எண்ணைத் தவிர வேறு எந்த எழுத்துக்களும், ஸ்டிக்கர்களும், மெசேஜ்களும் இருக்கக் கூடாது.
நம்பர் பிளேட்டில் தவறான எழுத்துக்கள் அல்லது ஸ்டிக்கர்கள் இருந்தால், போலீஸ்துறைக்கு குற்றவாளிகளை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்.
சில நேரங்களில் நம்பர் பிளேட்டில் ஜாதி பெயர்கள், சவால் விடும் சொற்கள் எழுதப்பட்டிருந்தால் அதுவும் பிரச்னைகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும்.
விருதுநகர் மாவட்டத்தில் டூவீலர் கார், நம்பர் பிளேட்டுகளில் பெயர் எழுதுவது அல்லது தனிப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில், தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் ஒட்டுவதையும் தடை செய்துள்ளனர்.
தமிழகத்தில் நம்பர் பிளேட்டில் போலீஸ், பிரஸ் போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவதையும், போலீஸ்துறை அனுமதி இல்லாமல் வேறு ஏதேனும் சின்னங்கள், குறியீடுகள், தங்கள் பணி தொடர்பான அடையாளங்களை வெளிப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிராபிக் போலீசார் இதை கண்காணிப்பதே கிடையாது. அவர்களின் கட்டுக்கடங்காத அலட்சியமும் ஒரு காரணம். இன்னொரு பக்கம் கட்சி பின்புலம் உள்ளவர்களும் இதை அசட்டை செய்கின்றனர்.