/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விபத்துக்களை தடுக்க மின் கசிவு தடுப்பு கருவி பயன்படுத்த அறிவுரை விபத்துக்களை தடுக்க மின் கசிவு தடுப்பு கருவி பயன்படுத்த அறிவுரை
விபத்துக்களை தடுக்க மின் கசிவு தடுப்பு கருவி பயன்படுத்த அறிவுரை
விபத்துக்களை தடுக்க மின் கசிவு தடுப்பு கருவி பயன்படுத்த அறிவுரை
விபத்துக்களை தடுக்க மின் கசிவு தடுப்பு கருவி பயன்படுத்த அறிவுரை
ADDED : ஜூன் 06, 2025 02:22 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு ஏற்படும் மின்விபத்துக்களை தடுக்க மின் கசிவு தடுப்பு கருவியை பயன்படுத்த வேண்டும் என மின்வாரிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா அறிவுறுத்தியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இது போன்ற நேரங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்.
அவற்றின் அருகே தண்ணீர் தேங்கி இருந்தால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ, அதை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு, மின் ஊழியர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள், மின்கம்பிகள் அடியிலோ தஞ்சம் புகாதீர்கள், கான்கிரீட் கூரையிலான கட்டங்களில் தஞ்சமடையுங்கள். பாதுகாப்பான கட்டடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடையுங்கள், மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர்கசிவு இருந்தால் அங்கு மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
காற்று, மழை காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக அவற்றை வெட்டி அப்புறப்படுத்த முயற்சிக்க கூடாது. மின் ஊழியர்களை அணுக வேண்டும். மின் விபத்துக்களை தவிர்க்க மின் கசிவு தடுப்பு கருவியை பயன்படுத்த வேண்டும், என்றார்.