/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வாரந்தோறும் 4 வார்டுகளில் மாஸ் கிளீனிங் வாரந்தோறும் 4 வார்டுகளில் மாஸ் கிளீனிங்
வாரந்தோறும் 4 வார்டுகளில் மாஸ் கிளீனிங்
வாரந்தோறும் 4 வார்டுகளில் மாஸ் கிளீனிங்
வாரந்தோறும் 4 வார்டுகளில் மாஸ் கிளீனிங்
ADDED : மே 11, 2025 05:39 AM

சிவகாசி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி மாநகராட்சியில் மாஸ் கிளீனிங் முறையில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வாரத்திற்கு நான்கு வார்டுகளில் இம்முறையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என கமிஷனர் சரவணன் தெரிவித்தார்.
சிவகாசி மாநகராட்சி, மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் மாஸ் கிளீனிங் முறையில் ஏதாவது ஒரு வார்டினை தேர்வு செய்து தெருக்களில் குப்பை அகற்றுதல், ரோடு சுத்தம் செய்தல் வாறுகால் துார்வாறுதல் உள்ளிட்ட பல்வேறு துாய்மைப்பணி நடைபெறும். இப்பணிகள் சில ஆண்டுகளாக நடைபெறவில்லை. எனவே மாஸ் கிளீனிங் முறையில் துாய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக சிவகாசி மாநகராட்சி கமிஷனர் சரவணன் சிவகாசியில் மாஸ் கிளீனிங் முறையில் துாய்மைப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார். அதன்படி வார்டு 12, செங்கமல நாச்சியாபுரம் மெயின் ரோடு, வார்டு 15 ஆலமரத்து பட்டி மெயின் ரோடு, வார்டு 42 புது மேட்டு தெரு, வார்டு 31 திருத்தங்கல் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மாஸ் கிளீனிங் முறையில் 300 க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் முட்செடிகள், புதர்களை அகற்றுதல், ரோடுகளில் தேங்கி இருந்த மண்மேடுகளை அகற்றுதல், மழைநீர் வடிகால், கழிவுநீர் வாய்க்கால்களில் தேங்கியிருந்த மண் மற்றும் குப்பைகளை முழுமையாக அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
கமிஷனர் பணிகளை பார்வையிட்டு கூறுகையில், மாநகர் பகுதியில் அமைந்துள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் தினசரி குப்பை சேகரிக்கும் பணிகள் தொய்வு இல்லாமல் சிறப்பாக நடைபெறும். அனைத்து வார்டுகளிலும் துாய்மையை பராமரிக்கும் பொருட்டு வாரத்திற்கு நான்கு வார்டுகள் வீதம் ஒட்டுமொத்த கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு மாநகர் பகுதிகளை துாய்மையாக பராமரிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.