/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சந்தை செயல்படுவதற்கு தடை காய்கறிகளை கொட்டி மறியல் சந்தை செயல்படுவதற்கு தடை காய்கறிகளை கொட்டி மறியல்
சந்தை செயல்படுவதற்கு தடை காய்கறிகளை கொட்டி மறியல்
சந்தை செயல்படுவதற்கு தடை காய்கறிகளை கொட்டி மறியல்
சந்தை செயல்படுவதற்கு தடை காய்கறிகளை கொட்டி மறியல்
ADDED : செப் 09, 2025 03:44 AM

விருதுநகர்: விருதுநகரில் திங்கள் கிழமை சந்தை அமைக்க தடை விதித்த நகராட்சியை கண்டித்து காய்கறிகளை கொட்டி ரோடு மறியலில் விவசாயிகள், வியாபாரிகள் ஈடுபட்டனர்.
விருதுநகர் பாண்டியன் நகர் செல்லும் வழியில் ஏ.ஏ., ரோட்டில் திங்கள் தோறும் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இங்கிருந்து அகற்றி நகராட்சிக்கென மார்க்கெட் கட்டி அங்கு இடமாற்ற வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டது. அந்த வார்டு கவுன்சிலர் ரோகிணி கலெக்டர் சுகபுத்ரா, கமிஷனர் சுகந்தி ஆகியோருக்கு மனு அளித்திருந்தார். இந்நிலையில் இங்கு மார்க்கெட் அமைக்க கூடாது என நகராட்சி உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று காய்கறி வண்டிகளுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். நேற்று சந்தை நேரமான மாலை வியாபாரிகள், விவசாயிகள் வந்த போது தடை தொடர்ந்ததால் எதிர்ப்பு தெரிவித்து காய்கறிகளை கொட்டி ரோடு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்தனர். மாலை 4:00 மணியில் இருந்து45 நிமிடத்திற்கு மேல் மறியலில் ஈடுபட்டதால் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்று இடம் தருவதாக நகராட்சி அதிகாரிகளை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.