ADDED : செப் 09, 2025 03:43 AM

விருதுநகர்: காலி மதுபாட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என்ற உத்தரவால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் பணிச்சுமையை நீக்க மாற்றுத் திட்டத்தை உருவாக்குவது, 22 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் சி.ஐ.டி.யு.-டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சந்திரசேகர், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா, மாநில துணைத் தலைவர் வேல்முருகன் பேசினர்.