/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகர், ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு விருதுநகர், ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு
விருதுநகர், ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு
விருதுநகர், ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு
விருதுநகர், ஸ்ரீவி., ரயில்வே ஸ்டேஷனில் மதுரை கோட்ட மேலாளர் ஆய்வு
ADDED : ஜூன் 06, 2025 02:28 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு ரயில்வே ஸ்டேஷன்களில் நடக்கும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் ஓரிரு மாதங்களில் முடிவடைந்து பயன் பாட்டுக்கு வருமென மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.
மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மதுரை ரயில்வே கோட்டத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், பழனி, ராமநாதபுரம், காரைக்குடி, பரமக்குடி, சோழவந்தான் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகள் வெயிட்டிங் ஹால், லிப்ட், நடை மேம்பாலம், டிஜிட்டல் கோச் பொசிஷன் போர்டுகள், பார்க், வாகன காப்பகம் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன்களில் நடக்கும் பணிகளை நேற்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா ஆய்வு செய்தார்.
இதற்காக நேற்று மதியம் மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த கோட்ட மேலாளரை, நிலைய அலுவலர் ராஜு தலைமையிலான ஊழியர்கள் வரவேற்றனர்.
பின்னர் பயணிகள் வெயிட்டிங் ஹால், வாகன காப்பகம், நுழைவாசல், முகப்பு ஆர்ச் உள்ளிட்ட பணிகளை, மாலை 5:00 மணி வரை ஆய்வு செய்த கோட்ட மேலாளர், மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகளை திட்ட அலுவலர்களிடம் கூறினார்.
பின்னர் அவர் கூறியதாவது, பெரும்பாலான ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டப்பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
ஒரு சில சிறிய பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் அனைத்து பணிகளும் முழுமையாக முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்துாரில் ஸ்டாப்பிங் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.