ADDED : ஜூன் 06, 2025 02:27 AM
சாத்துார்: சாத்துார் பை பாஸ் ரோடு மேலக்காந்திநகர் பூங்காவில் உலக சுற்றுச்சூழல்தினத்தை முன்னிட்டு பா.ஜ., மாவட்டத் தலைவர் சரவண துரை மரக்கன்று நட்டார். நகரத் தலைவர் பொன்ராஜ், சாத்துார் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் மாரிக் கண்ணு, நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
* சாத்துார் என்றா நிறுவனம் சார்பில் ஒத்தையால் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.
வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி தலைமை வகித்தார். ஊராட்சி பகுதியில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.
*சாத்துார் ஆர்.கே.வி. நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. மரியன் ஊரணியில் மரக்கன்றுகள் நட்டினர். பின்னர் மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.