ADDED : ஜூன் 06, 2025 02:28 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஈஷா யோகா மையத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு கிராமம் ஒரு அரசமரம் என்ற திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நாச்சியார் பட்டி கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம் மரக்கன்றுகளை நடவு செய்து, அரச மர கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி, இயற்கை விவசாயி ராஜேஷ், விவசாயிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.