/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆக்கிரமிப்பில் ஒன்றிய அலுவலக ரோடு, திறந்தவெளியால் அல்லல் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் ஆக்கிரமிப்பில் ஒன்றிய அலுவலக ரோடு, திறந்தவெளியால் அல்லல் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
ஆக்கிரமிப்பில் ஒன்றிய அலுவலக ரோடு, திறந்தவெளியால் அல்லல் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
ஆக்கிரமிப்பில் ஒன்றிய அலுவலக ரோடு, திறந்தவெளியால் அல்லல் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்
ஆக்கிரமிப்பில் ஒன்றிய அலுவலக ரோடு, திறந்தவெளியால் அல்லல் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்

கட்டுப்பாடு வேண்டும்
ராமலிங்கம், தனியார் ஊழியர்: வணிக வளாக கடைகள் உள்ள பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் அப்பகுதியில் நடமாட முடியவில்லை. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் முகம் சுளிக்கின்றனர். மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பால் அவதி
பாலமுருகன், தனியார் ஊழியர்: ஒன்றிய அலுவலக ரோட்டில் எம்.எல்.ஏ., அலுவலகம், உழவர் சந்தை, நெடுஞ்சாலை துறை அலுவலகம், ஒன்றிய அலுவலகம் இருப்பதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி அதிகாரிகளின் வாகனங்கள் சென்று வரும். ரோட்டை ஆக்கிரமித்து சுருங்கி இருப்பதால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை.
ரவுண்டானா அவசியம்
சீனிவாசன், விவசாயி: ரவுண்டானா இல்லாததால் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாகனங்களை ஒழுங்குபடுத்தி முறையான வழியில் சென்று வர ரவுண்டானா ஏற்படுத்தப்படும் என தெரிவித்தனர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. விபத்தை தடுக்க ரவுண்டானா ஏற்படுத்த வேண்டும்.