/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காரியாபட்டியில் சி.சி.டி.வி., கேமரா சேவை துவக்கம் காரியாபட்டியில் சி.சி.டி.வி., கேமரா சேவை துவக்கம்
காரியாபட்டியில் சி.சி.டி.வி., கேமரா சேவை துவக்கம்
காரியாபட்டியில் சி.சி.டி.வி., கேமரா சேவை துவக்கம்
காரியாபட்டியில் சி.சி.டி.வி., கேமரா சேவை துவக்கம்
ADDED : மார் 23, 2025 04:34 AM
காரியாபட்டி : காரியாபட்டியில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது.
காரியாபட்டியில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாகம், போலீசார், பொதுமக்கள் பங்களிப்புடன் 12 முக்கிய இடங்களில் 35 கேமராக்கள் பொருத்தப்பட்டன. கட்டுப்பாட்டு அலுவலகம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது. எஸ்.பி., கண்ணன், ஏ.எஸ்.பி. மதிவாணன், பேரூராட்சி தலைவர் செந்தில் துவக்கி வைத்தனர்.
இனி டூவீலர் திருட்டு, வீடு புகுந்து நகை கொள்ளை அடிப்பது, மற்ற பகுதிகளில் இருந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு இப்பகுதியில் பதுங்குவது, தப்பிச் செல்வதை எளிதில் கண்டறிந்து கைது செய்ய முடியும் என்பதால் குற்ற சம்பவங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன், சப் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பேகம், போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.