/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அம்மா உணவகம் அருகே சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் அம்மா உணவகம் அருகே சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம்
அம்மா உணவகம் அருகே சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம்
அம்மா உணவகம் அருகே சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம்
அம்மா உணவகம் அருகே சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம்
ADDED : மார் 23, 2025 04:34 AM

சாத்துார் : சாத்துாரில் அம்மா உணவகம் அருகே சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றத்தால் உணவு சாப்பிடுபவர்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் வடக்கு ரத வீதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மதிய வேளைகளில் உணவு விற்பனை செய்யப்படுகிறது. வசதி இல்லாத ஏழை நடுத்தர மக்கள், பள்ளி மாணவர்கள் அம்மா உணவகத்திற்கு வந்து உணவு வாங்கி உண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அம்மா உணவகம் அருகே உள்ள காலி இடத்தில் அப்பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் சிறு வியாபாரிகள் மக்கள் ஆகியோர் காலி இடத்தை திறந்தவெளி சிறுநீர் கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களும் வடக்கு ரதவீதி வழியாக நடந்து செல்லும் மக்களும் துர்நாற்றத்தால் அவதிப்படும் நிலை உள்ளது. அம்மா உணவகம் அருகில் மக்கள் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.