ADDED : மார் 23, 2025 04:52 AM

அருப்புக்கோட்டை : தமிழகத்தில் மதுவால் குடும்பங்கள் சீரழிவதை தடுக்காத, தென்மாவட்டங்களை கேரளா அரசின் குப்பை கிடங்காக மாற அனுமதித்த தி.மு.க., அரசை கண்டித்து மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருதுநகரில் தி.மு.க., அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்திய ஆர்ப்பாட்டம் பா.ஜ., கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் அவரது அலுவலகத்தில் நடந்தது.
* அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் பா.ஜ., கிழக்கு மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகரத் தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
* ஸ்ரீவில்லிபுத்துாரில் மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரைராஜா நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்துாரில் அவரது வீட்டு வாசலில் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டார்.