/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கோயில் சுவர் வெளிப்புறம் கட்டட கழிவுகள்: பக்தர்கள் அவதி கோயில் சுவர் வெளிப்புறம் கட்டட கழிவுகள்: பக்தர்கள் அவதி
கோயில் சுவர் வெளிப்புறம் கட்டட கழிவுகள்: பக்தர்கள் அவதி
கோயில் சுவர் வெளிப்புறம் கட்டட கழிவுகள்: பக்தர்கள் அவதி
கோயில் சுவர் வெளிப்புறம் கட்டட கழிவுகள்: பக்தர்கள் அவதி
ADDED : மார் 23, 2025 06:38 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் ஒரு புற சுற்றுச்சுவர் பகுதியில் கட்டட கழிவுகளை கொட்டுவதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் ஹிந்து சமய அறநிலைய துறையின் மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. நுாற்றாண்டு புகழ்வாய்ந்த இக்கோயில், ஒரு ஆண்டிற்கு முன்பு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலின் சுற்று சுவர் பல இடங்களில் பழுதானதால் அவை புதுப்பிக்கப்பட்டு முட்டு சுவர் கட்டும் பணி நடந்து வந்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதால், பணி நிறுத்தப்பட்டது.
அதன்பின் பணியை துவங்காததால் அந்த பகுதியில் உள்ளவர்கள் வீடுகளின் கட்டட கழிவுகள், கட்டுமான பொருட்களை கொட்டி வைத்துள்ளனர். குப்பையும் கொட்டப்படுகின்றன. இதனால் இந்த பகுதி சுகாதார கேடாக உள்ளது. இந்த பகுதி வழியாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமபடுகின்றனர்.
கோயில் நிர்வாகமும், நகராட்சியும் சுற்றுச்சுவர் அருகில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள், கட்டட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். கோயில் நிர்வாகம் சுற்று சுவரில் முட்டு சுவர் கட்டும் பணியை முடித்து, அந்த பகுதியை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.