/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/காரியாபட்டி -- நரிக்குடி ரோட்டை இருவழியாக மாற்ற எதிர்பார்ப்புகாரியாபட்டி -- நரிக்குடி ரோட்டை இருவழியாக மாற்ற எதிர்பார்ப்பு
காரியாபட்டி -- நரிக்குடி ரோட்டை இருவழியாக மாற்ற எதிர்பார்ப்பு
காரியாபட்டி -- நரிக்குடி ரோட்டை இருவழியாக மாற்ற எதிர்பார்ப்பு
காரியாபட்டி -- நரிக்குடி ரோட்டை இருவழியாக மாற்ற எதிர்பார்ப்பு
ADDED : பிப் 11, 2024 12:38 AM
நரிக்குடி: ஒரு வழி ரோடாக இருக்கும் காரியாபட்டி - நரிக்குடி ரோட்டை இருவழி ரோடாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
காரியாபட்டியில் இருந்து நரிக்குடி 28 கி.மீ., தொலைவில் உள்ளது. முடுக்கன்குளம், எஸ். மறைக்குளம், பனைக்குடி, சாலை இலுப்பைகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்காக காரியாபட்டிக்கும் நரிக்குடிக்கும் சென்று வருகின்றனர்.
இந்த வழித்தடத்தில் 10க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. டவுன் பஸ்களை நம்பியே இப்பகுதி மக்கள் உள்ளனர். குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் இயக்கப்படுவதால் காத்திருந்து பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் எப்போதும் போக்குவரத்து மிகுந்த ரோடாக இருந்து வருகிறது.
ஏராளமான கனரக வாகனங்கள், டூவீலர்கள் என அடிக்கடி வந்து செல்கின்றன. போக்குவரத்துக்கு ஏற்ப ரோடு வசதி இல்லை.
ஒரு வழி ரோடாக இருப்பதால் விலகிச் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஏராளமான ஆபத்தான வளைவுகள், ஓடைகள் இருப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. இரு கனரக வாகனங்கள் விலகிச் செல்ல சிக்கல் ஏற்படுகிறது. மழை நேரங்களில் ரோட்டை விட்டு கீழே இறக்கினால் வாகனங்கள் சகதியில் சிக்கிக் கொள்ளும். கவிழும் வாய்ப்பு உள்ளதால் டிரைவர்கள் ரோட்டை விட்டு கீழே இறக்குவதில்லை.
விபத்து ஏற்படுவதுடன் டிரைவர்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இப்பகுதியில் விவசாய பொருட்கள், விளைந்த தானியங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு வழி ரோடாக இருக்கும் இந்த வழித்தடத்தை வாகன போக்குவரத்திற்கு ஏற்ப இருவழி ரோடாக மாற்றி, விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.