பெண்களுக்கு மாதந்தோறும் ரூ1,500 உதவித்தொகை: மஹாராஷ்டிராவில் ஜூலை முதல் அமல்
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ1,500 உதவித்தொகை: மஹாராஷ்டிராவில் ஜூலை முதல் அமல்
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ1,500 உதவித்தொகை: மஹாராஷ்டிராவில் ஜூலை முதல் அமல்
ADDED : ஜூன் 29, 2024 05:22 PM

மும்பை: 21 முதல் 60 வயது உள்ள தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என மஹாராஷ்டிர மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு துணை முதல்வர்களாக தேவேந்திர பட்னவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் உள்ளனர்.
சட்ட சபையின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூன் 27ம் தேதி துவங்கியது. சட்டசபையில் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் பல்வேறு இலவச திட்டங்களை அறிவிக்கப்பட்டுள்ளது.
21 முதல் 60 வயது உள்ள தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது. ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சில முக்கிய திட்டங்கள்:
* மாநில அரசு பஸ்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.
* ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
* மின்சார கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகளின் மின் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.
* வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும்.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாதம் 1,500 ரூபாயும், அரசு பஸ்களில் 50 சதவீத கட்டணச் சலுகையும், வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.