சத்தீஸ்கரில் மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு: ஆய்வில் அம்பலம்
சத்தீஸ்கரில் மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு: ஆய்வில் அம்பலம்
சத்தீஸ்கரில் மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு: ஆய்வில் அம்பலம்
ADDED : ஜூன் 29, 2024 05:24 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ரூ.660 கோடிக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022- 23 மற்றும் 2023 - 24 நிதியாண்டில் எந்த நிதி ஒதுக்கீடும் இல்லாமல் மாநில மருத்துவ சேவை ஆணைய கழகம் இந்த உபகரணங்கள் வாங்கியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆய்வில் கூறப்பட்டு உள்ளதாவது:மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை வாங்கிய சத்தீஸ்கர் மருத்துவ சேவை ஆணைய கழகம், 776 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு விநியோகம் செய்து உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், 350 ஆரம்ப சுகாதார நிலையங்கள், அதனை கையாளுவதற்கான நபர்கள் அதனை சேமித்து வைக்கும் இடங்கள் இல்லாமலும், அவை பயனற்ற நிலையில் உள்ளன.
சுகாதார சேவைகளுக்கான இயக்குநர், எந்த ஆய்வும் செய்யாமலும், தேவையை பற்றி அறந்து கொள்ளாமலும் உபகரணங்களை வாங்க உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் அங்கு தேவைப்படும் அளவு ஆகியவற்றை பற்றி கவலை கொள்ளாமல், அனைத்து மையங்களுக்கும் ஒரே எண்ணிக்கையில் உபகரணங்களை அனுப்பி வைத்துள்ளார். இதனால், அதிக மதிப்புள்ள உபகரணங்கள் செயலிழந்து அதன் தரம் மோசமடையும் நிலையில் உள்ளது.
உதாரணமாக, ராய்ப்பூரில் உள்ள பத்கோவான் ஆரம்ப சுகாதார மையத்தில் சோனாகிராபி மற்றும் எக்ஸ்ரே இயந்திரங்கள் வாங்கி வைக்கப்பட்டன. ஆனால், அதனை செயல்படுத்துவதற்கான டாக்டர்கள் நியமனம் செய்யப்படவில்லை. உர்லா என்ற இடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அதிகளவு சேர்கள் விநியோகம் செய்யப்பட்டன. ஆனால், அதனை வைப்பதற்கு போதிய இடம் இல்லை.
ராய்ப்பூரில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு, 2018 ல் ரூ.18 கோடி செலவில் வாங்கப்பட்ட பிஇடி ஸ்கேன் காமா இயந்திரம் வாங்கப்பட்டாலும் அதனை செயல்படாமல் உள்ளதாக டாக்டர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.