/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தலைமை தபால் நிலையத்தில் இணைய கோளாறு சீரமைப்பு தலைமை தபால் நிலையத்தில் இணைய கோளாறு சீரமைப்பு
தலைமை தபால் நிலையத்தில் இணைய கோளாறு சீரமைப்பு
தலைமை தபால் நிலையத்தில் இணைய கோளாறு சீரமைப்பு
தலைமை தபால் நிலையத்தில் இணைய கோளாறு சீரமைப்பு
ADDED : ஜூன் 14, 2025 12:14 AM
விருதுநகர்:விருதுநகர் தலைமை தபால் நிலையத்தில் ஏற்பட்ட இணைய கோளாறு தினமலர் செய்தி எதிரொலியால் சரி செய்யப்பட்டது.
விருதுநகர் பாண்டியன் நகர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் சேவைகள், வங்கி சேவைகள், இதர சேவைகள் அடங்கிய பல பொதுப் பணிகளைச் செய்கின்றனர். மேலும் ஆதார் அட்டை பதிவு செய்தல், பயணக் காப்பீடு, நுாறு நாள் திட்ட ஊதியங்கள், முதியோர் ஓய்வூதியம் வழங்குதல், டிஜிட்டல் தபால் சேவைகள் செய்யப்படுகின்றன. இந்த சேவைகள் அனைத்திற்கும் இணையம் என்பது முக்கியமானதாக உள்ள நிலையில் கடந்த ஒரு வாரமாக இணைய கோளாறு ஏற்பட்டு தபால் நிலையமே ஸ்தம்பித்து வந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் ஜூன்12ல் செய்தி வெளியானது. இதையடுத்து தலைமை தபால் நிலையத்தில் ஏற்பட்ட இணைய கோளாறு சரி செய்யும் பணிகள் நடந்து சீரான சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.