ADDED : ஜூன் 14, 2025 12:13 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே, மதுரையில் இருந்து செங்கோட்டை சென்ற அரசு பஸ் மீது கல்வீசியவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரை புதுக்குளம் டிப்போவை சேர்ந்த அரசு பஸ் ஒன்று நேற்று மாலை 5:00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் அழகாபுரி தனியார் ஓட்டல் அருகே வரும்போது, அந்த ரோட்டின் வழியாக நடந்து சென்ற ஒருவர் பஸ்சின் மீது கல்லை வீசி உள்ளார். இதில் முன்பக்க கண்ணாடி சேதமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயமில்லை.
கல் வீசியவரை பிடித்து நத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.