/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ க்யூ.ஆர்., கோடு பயன்படுத்தி வெளிநோயாளிகள் சீட்டு பதிவு 5 மருத்துவக்கல்லுாரிகளில் அடுத்த மாதம் அமல் க்யூ.ஆர்., கோடு பயன்படுத்தி வெளிநோயாளிகள் சீட்டு பதிவு 5 மருத்துவக்கல்லுாரிகளில் அடுத்த மாதம் அமல்
க்யூ.ஆர்., கோடு பயன்படுத்தி வெளிநோயாளிகள் சீட்டு பதிவு 5 மருத்துவக்கல்லுாரிகளில் அடுத்த மாதம் அமல்
க்யூ.ஆர்., கோடு பயன்படுத்தி வெளிநோயாளிகள் சீட்டு பதிவு 5 மருத்துவக்கல்லுாரிகளில் அடுத்த மாதம் அமல்
க்யூ.ஆர்., கோடு பயன்படுத்தி வெளிநோயாளிகள் சீட்டு பதிவு 5 மருத்துவக்கல்லுாரிகளில் அடுத்த மாதம் அமல்
ADDED : ஜூன் 14, 2025 06:26 AM
விருதுநகர்:5 அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்து பதிவு சீட்டு பெறும் முறை அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
ராமநாதபுரம், விருதுநகர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவமனை மேலாண்மை திட்டம் 3.0 (எச்.எம்.ஐ.எஸ்., 3.0) செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்துடன் இணைக்கப்பட்ட மென்பொருள் பெறப்பட்டுள்ளது.
இதற்கான இணையதளத்தின் க்யூ.ஆர்., கோடு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் வரும் இடங்களில் அமைக்கப்படும். இதை அலைபேசியில் ஸ்கேன் செய்தால் ஆதார் பதிவுகளுடன் உருவாக்கப்பட்ட இணையதளம் தோன்றும். இதில் தங்களின் விவரங்களை பதிவு செய்த பின் 'தனி எண்' குறுஞ்செய்தியாக வந்துவிடும்.
இந்த தனி எண்ணை மட்டும் வெளிநோயாளிகள் சீட்டு பதியும் இடத்தில் தெரிவித்து மருத்துவ பதிவு சீட்டை பெற்று நேரடியாக மருத்துவர்களை அணுக முடியும். இதனால் நோயாளிகள் சீட்டு பதிவு செய்ய காத்திருப்பது தவிர்க்கப்படும்.
படிப்படியாக உள்நோயாளிகள் பிரிவு, மருந்தகங்கள், ஆய்வகங்கள் என அனைத்து பிரிவுகளுக்கும் இது விரிவு படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது.