/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வட்டியின்றி நிவாரணம்; பட்டாசு விபத்தில் பாதித்தோர் கோரிக்கை வட்டியின்றி நிவாரணம்; பட்டாசு விபத்தில் பாதித்தோர் கோரிக்கை
வட்டியின்றி நிவாரணம்; பட்டாசு விபத்தில் பாதித்தோர் கோரிக்கை
வட்டியின்றி நிவாரணம்; பட்டாசு விபத்தில் பாதித்தோர் கோரிக்கை
வட்டியின்றி நிவாரணம்; பட்டாசு விபத்தில் பாதித்தோர் கோரிக்கை
ADDED : செப் 23, 2025 03:50 AM
விருதுநகர்: விருதுநகரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவு படி வட்டியோடு நிவாரணம் வழங்க கோரி பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 2021ல் நடந்த சாத்துார் அச்சங்குளம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும் அதை நிறைவேற்ற தாமதம் ஏற்பட்ட நிலையில், ஆக. மாதம் அரசு ரூ.5.67 கோடி நீதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பசுமை தீர்ப்பாய கோர்ட்டில் தெரிவித்தது. ஒதுக்கிய பணத்தை தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்காமல் மாவட்ட நிர்வாகம் தாமதித்து வந்தது. இந்நிலையில் செப். 18 இரவு அனைவருக்கும் வரவு வைத்தது.
உத்தரவு பிறப்பித்த ஒரு மாத காலத்திற்குள் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் 12 சதவீத வட்டியோடு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், 4 ஆண்டுகள் கழித்து வட்டியின்றி தான் வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டி நேற்று வட்டியோடு நிவாரணம் கோரி மனு அளித்தனர்.