/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கிருஷ்ணன் கோவிலில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள் கிருஷ்ணன் கோவிலில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்
கிருஷ்ணன் கோவிலில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்
கிருஷ்ணன் கோவிலில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்
கிருஷ்ணன் கோவிலில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்
ADDED : செப் 23, 2025 03:50 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவிலில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிமிரப்புகளை அகற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை- -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணன்கோவிலில் கல்லுாரிகள், பள்ளிகள் அதிகளவில் உள்ளதால் வெளி மாவட்ட மாணவர்களும், சுற்று வட்டார பள்ளி மாணவர்களும் தினமும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதனால் தினமும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மாணவர்கள் ரோட்டை கடக்கும் போது விபத்து அபாயம் காணப்படுகிறது.
இதனை தவிர்க்க வேணுகோபால்சாமி கோயிலில் இருந்து நான்கு வழிச்சாலை இணைப்பு ரோடு வரையிலும், கலசலிங்கம் பல்கலை வரையிலும் ரோட்டின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி செண்டர் மீடியன் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் எதிர்பார்க்கின்றனர்.