/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசியில் 5 வார்டுகளில் தண்ணீர் இல்லை சிவகாசியில் 5 வார்டுகளில் தண்ணீர் இல்லை
சிவகாசியில் 5 வார்டுகளில் தண்ணீர் இல்லை
சிவகாசியில் 5 வார்டுகளில் தண்ணீர் இல்லை
சிவகாசியில் 5 வார்டுகளில் தண்ணீர் இல்லை
ADDED : செப் 23, 2025 03:49 AM
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் 18 முதல் 22 வார்டுகளுக்கு புழக்கத்திற்கு தண்ணீர் இல்லாமலும் குடிநீர் பற்றாக்குறையாலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. பத்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இது அனைவருக்கும் போதாத நிலையில் தண்ணீரை மக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
திருத்தங்கல் பகுதி மக்களுக்காக பெரியகுளம் கண்மாயில் 30 க்கும் மேற்பட்ட போர்வெல் அமைக்கப்பட்டு புழக்கத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இதன்படி 1 முதல் 17 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கான தண்ணீருக்கு பற்றாக்குறை இல்லை. அதே சமயத்தில் 18 முதல் 22 வார்டு பகுதி மக்களுக்கு புழக்கத்திற்கு கூட தண்ணீர் இல்லை. இதனால் இப்பகுதியினர் இன்று வரை புழக்கத்திற்கு மட்டுமின்றி குளிக்க, துணி துவைக்க என தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
பட்டாசு, கூலி தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில் தினமும் தண்ணீரை விலைக்கு வாங்குவதற்கு வழியில்லாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதிக்கு சீரான தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.