/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இணைப்புச்சாலை தாமதம்: பாசனம் பாதிப்பு இணைப்புச்சாலை தாமதம்: பாசனம் பாதிப்பு
இணைப்புச்சாலை தாமதம்: பாசனம் பாதிப்பு
இணைப்புச்சாலை தாமதம்: பாசனம் பாதிப்பு
இணைப்புச்சாலை தாமதம்: பாசனம் பாதிப்பு
ADDED : செப் 23, 2025 03:51 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்காசி ரோடு இணைப்பு சாலைக்கான பணிகள் தாமதத்தால் பாசன வாய்க்கால் சிக்கலால் சாகுபடி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டிலிருந்து தென்காசி தேசிய நெடுஞ்சாலைக்கு நேரடி இணைப்பு ரோடு பணிகளுக்காக 2023 ல் ரூ. 8.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெரியாதிகுளம், கடம்பன் குளம் கண்மாய் பாசன பகுதி வழியே 30 மீட்டர் அகலத்தில் 2.10 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக பிப்.8ல் அடிக்கல் நாட்டப்பட்டு 10 மாதத்திற்குள் பணிகள் முடிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு 18 நீர்வழி பாலங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பாசன வயல்களுக்கு நடுவே இணைப்பு சாலை செல்வதால் வாய்க்கால் தண்ணீர் மறுபக்கம் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் 30 சதவீதத்துக்கும் அதிகமான நெல் வயல்கள் பாசனத்திற்கு வழியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயி நாகராஜ்: ஏற்கனவே பெரியாதி குளம், கடம்பன்குளம் இரண்டிலும் ஏழு மடைகள் மூலம் நெல்வயல்கள் பாசனம் பெறுகிறது. பணிகள் தொடங்கி ஏற்கனவே ஒரு போகம் நீர் பாய்ச்ச முடியாமல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தொடர் தாமதத்தால் தற்போது முதல் போக சாகுபடியும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்காலுக்கு தடையின்றி தண்ணீர் போக வழி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.