Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஓட்டல்களில் விலைப்பட்டியல் வைப்பது அவசியம்: கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஓட்டல்களில் விலைப்பட்டியல் வைப்பது அவசியம்: கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஓட்டல்களில் விலைப்பட்டியல் வைப்பது அவசியம்: கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஓட்டல்களில் விலைப்பட்டியல் வைப்பது அவசியம்: கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

ADDED : ஜூன் 03, 2024 02:33 AM


Google News
மாவட்டத்தில் மதுரை- - கன்னியாகுமரி, துாத்துக்குடி நான்கு வழிச்சாலை, நகரங்கள், கிராமப்புறங்களில் ஏராளமான ஓட்டல்கள் உள்ளன. வெளியில் சென்று வருபவர்கள் பசி எடுக்கும் போது ஏதாவது ஒரு ஓட்டலில் சாப்பிட்டு பசியை போக்க நினைக்கின்றனர்.

இந்நிலையில் பெரும்பாலான நகர், கிராமப்புற ஓட்டல்களில் விலை பட்டியல் இல்லாத சூழல் உள்ளது. அப்படியே இருந்தாலும் அது பெயரளவுக்கு பழைய விலையில் இருக்கும். தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப பொருட்களின் விலை அதிகரித்து இருப்பதால் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வர். சர்வர்களிடம் உணவுப் பொருட்களின் விலையை கேட்டுத்தான் சாப்பிட வேண்டிய நிலை உள்ளது.

சாதாரண ஒரு சில ஓட்டல்களில் ஒரு ஊத்தப்பத்தின் விலை ரூ.10 க்கு விற்கப்படும். அதே ஒரு ஊத்தப்பம் பெரிய ஓட்டல்கள், நான்கு வழிச்சாலையில் உள்ள ஓட்டல்களில் ரூ.60, 80க்கு விற்கப்படுகிறது.

ஏழை நடுத்தர மக்கள் சற்று பெரிய ஓட்டல்களில் சாப்பிடும் போது, ரூ.20, 30 இருக்கும் என நினைத்து சாப்பிட்டு விடுவர். பில் வரும்போதுதான் விலை அதிகரித்திருப்பது தெரியும். இதனால் தேவையற்ற வாக்குவாதம், மோதல் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஏழை நடுத்தர மக்கள் ஓட்டல்களில் நுழைந்தவுடன் முதலில் அவர்களுடைய கண் தேடுவது விலை பட்டியலைத் தான். விலைப்பட்டியலை பார்த்து தான் என்னென்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவெடுத்து சாப்பிடுகின்றனர்.

இதை மனதில் வைத்தும், கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கும் நோக்கிலும் அனைத்து ஓட்டல்களிலும் விலை பட்டியல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு விதி உள்ளது. பெரும்பாலான ஓட்டல் இந்த விதியை காற்றில் பறக்கவிட்டுள்ளன. அப்படியே வைத்திருந்தாலும் விலை பட்டியலில் எண்கள் அழிந்து, குழப்பம் ஏற்படும் வகையில் தான் உள்ளது.

இது போன்ற ஓட்டல்களில் அலுவலர்கள் ஆய்வு செய்து விலை பட்டியலை முறையாக வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us