/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசி தனிஷ்க் நகைக்கடையில் தங்க பரிமாற்றம் திட்டம் துவக்கம் சிவகாசி தனிஷ்க் நகைக்கடையில் தங்க பரிமாற்றம் திட்டம் துவக்கம்
சிவகாசி தனிஷ்க் நகைக்கடையில் தங்க பரிமாற்றம் திட்டம் துவக்கம்
சிவகாசி தனிஷ்க் நகைக்கடையில் தங்க பரிமாற்றம் திட்டம் துவக்கம்
சிவகாசி தனிஷ்க் நகைக்கடையில் தங்க பரிமாற்றம் திட்டம் துவக்கம்
ADDED : ஜூன் 03, 2024 02:34 AM

சிவகாசி: சிவகாசி கிளை டாடா தனிஷ்க் நகை கடையில் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு தங்கத்திற்கான சிறந்த மதிப்பு வழங்குவதற்காக தங்கப் பரிமாற்றம் திட்டம் துவங்கப்பட்டது.
கிளை உரிமையாளர் ராஜேஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய தங்க நகைகளை கொடுத்து புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளலாம். எந்த நகைக்கடையில் இருந்தும் வாங்கிய தங்க நகைகளாக இருந்தாலும் அவற்றை இந்த கடையில் கொடுத்து புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளலாம்.
கழிவே இல்லாமல் வாடிக்கையாளர்கள் பழைய தங்கத்திற்கு பதிலாக புதிய வடிவமைப்புகளை கொண்ட புதிய தங்க ஆபரணங்களை வாங்கி தரம் உயர்த்திக் கொள்ளலாம்.
கிளை உரிமையாளர் கூறுகையில், வாடிக்கையாளர்கள் எளிமையான முறையில் ஆண்டு முழுவதும் தங்க நகைகளை எக்சேஞ்ச் செய்து கொள்ளும் சேவை வழங்கப்படுகிறது. தனிஷ்க்கின் நம்பகத்தன்மை வாய்ந்த பிராண்டின் மரபும் வெளிப்படையான ஆபரண பரிமாற்ற செயல்பாடும் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் தங்கு தடையற்ற அனுபவத்தை வழங்கும், என்றார். கடை மேலாளர் ராஜேஷ்வரன், மண்டல மேலாளர் விக்னேஷ், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.