/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பல்லாங்குழியாக மாறிய மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை பல்லாங்குழியாக மாறிய மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை
பல்லாங்குழியாக மாறிய மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை
பல்லாங்குழியாக மாறிய மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை
பல்லாங்குழியாக மாறிய மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை
ADDED : ஜூன் 03, 2024 02:32 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை --துாத்துக்குடி நான்கு வழிச்சாலை மோசமான நிலையில் இருப்பதால் வாகன விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.
சென்னை, மதுரையிலிருந்து நான்கு வழி சாலை அருப்புக்கோட்டை வழியாக துாத்துக்குடிக்கு செல்லுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. துாத்துக்குடியில் துறைமுகம் இருப்பதால் அதிக டன்கள் உள்ள கனரக வாகனங்கள் லோடு ஏற்றிக்கொண்டு செல்கிறது.
அருப்புக்கோட்டையில் இருந்து செட்டிகுறிச்சி வரை உள்ள நான்கு வழி சாலை மோசமான நிலையில் மீண்டும் பள்ளமாக உள்ளது. புதிய ரோடு அமைத்து சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் பள்ளங்கள் விழுந்து பல்லாங்குழியாக மாறி வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலையில் உள்ளது. இதன் வழியாக டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர்.
கனரக வாகனங்கள் இந்த ரோடுகளில் அதிக அளவில் செல்வதால் ரோட்டின் தேய்மானம் அதிகமாக உள்ளது. இதற்கு ஏற்றார் போல் ரோடுகளை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. ரோடு பெயர்ந்து கிடந்தால் கடமைக்கு பெயிண்ட் அடிப்பது போல் ரோடு அமைக்கின்றனர். சிறிய மழை பெய்தால் கூட இந்த ரோடு கரைந்து விடுகிறது. மதுரை - - துாத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக செல்லும் நான்கு வழி ரோட்டை தரமான முறையில் அமைக்க வேண்டும்.