ADDED : ஜூன் 03, 2024 02:31 AM
விருதுநகர்: விருதுநகர் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை குழுவுடன் இணைந்து 58 ஊராட்சி மகளிர் குழுக்கள், 58 ஊராட்சி துாய்மை காவலர்கள், மக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் சட்டங்கள், திடக்கழிவு மறுசுழற்சி திட்டம் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், சூரியக்குமாரி, திடக்கழிவு மேலாண்மை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், மேலாண்மை வல்லுனர் பிரசாந்த், வழக்கறிஞர் அருண் செண்பக மணி, வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பேசினர்.
திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதே போல் நகராட்சிக்கான கூட்டம் விருதுநகர் நகராட்சி பூங்காவில் நடந்தது. நகராட்சி கமிஷனர் லீனா சைமன், வழக்கறிஞர்கள் உமா செண்பகவள்ளி, முருகன், மணிகண்டன் பேசினர்.