/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகரில் மண்மேவிய ரோடால் திணறும் வாகன ஓட்டிகள் விருதுநகரில் மண்மேவிய ரோடால் திணறும் வாகன ஓட்டிகள்
விருதுநகரில் மண்மேவிய ரோடால் திணறும் வாகன ஓட்டிகள்
விருதுநகரில் மண்மேவிய ரோடால் திணறும் வாகன ஓட்டிகள்
விருதுநகரில் மண்மேவிய ரோடால் திணறும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 03, 2024 02:31 AM

விருதுநகர்: விருதுநகரில் மண்மேவிய ரோடால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். விருதுநகர் அரசு மருத்துவமனையின் பக்கவாட்டு பகுதியான ராமமூர்த்தி ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதற்கு ஏற்றாற் போல் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு கடைகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இதன் ராமமூர்த்தி பாலம் செல்லும் பகுதிக்கும், சர்வீஸ் ரோடுக்கு செல்லும் பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் அதிகளவில் மண்மேவி உள்ளது. இதனால் இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். பாலங்களில் இருந்து சர்வீஸ் ரோட்டிற்கு திரும்புவோரும் விபத்தை சந்திக்கின்றனர். இது குறிப்பாக டூவீலரில் செல்வோரை அச்சுறுத்துகிறது. வழுக்கி விழுந்து விபத்து ஏற்பட செய்கிறது.
இதே சூழல் நகரின் பிற பகுதிகளிலும் உள்ளது. மண்மேவிய ரோடு பகுதிகளில் முறைப்படி கால நிர்ணயம் செய்து அவ்வப்போது பராமரிப்பது இல்லை.
மதுரை ரோடு, சாத்துார் ரோடு பகுதிகளில் சென்டர் மீடியனை யொட்டி மட்டும் மண் குவிவதை பராமரிக்கின்றனர். ஆனால் நகராட்சி பகுதியின் ஊடாக செல்லும் மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடுகளில் பெரிய அளவில் பராமரிப்பு இல்லை. எனவே விபத்துக்களை தவிர்க்க ரோடுகளில் உள்ள மண்ணை அகற்ற வேண்டும்.