ADDED : ஜூன் 03, 2024 02:30 AM
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டுஎண்ணிக்கைக்கும் வரும் அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். தி.மு.க., காங்., அ.தி.மு.க., தே.மு.தி.க.,பா.ஜ., நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்த ஓட்டு எண்ணும் பணிக்கு வரும் முகவர்கள் பங்கேற்றனர்.இவர்கள் ஓட்டுஎண்ணும் மையமான வி.எஸ்.வி.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் ஜூன் 4ல் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக அறிவுரை வழங்கினார்.