ADDED : ஜூன் 03, 2024 02:30 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பகலில் நேற்று காலையில் வெளுத்த வாங்கிய வெயிலின் வெப்பத்தை மாலையில் பெய்த மழை தணித்தது.
மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் பகலில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று பகல் வெப்பத்தை மாலை பெய்த மழை தணித்தது. விருதுநகரில் பகலில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மதியம் முதல் மேகமூட்டம் காணப்பட்டது. அதன் பின் மாலை 5:00 மணிக்கு துவங்கி இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
அருப்புக்கோட்டையில் இரவு 7:00 மணிக்கு இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. காரியப்பட்டியில் மாலை 5:00 மணிக்கு துவங்கி ஒரு மணி நேரம் மழை பெய்தது. சிவகாசியில் மாலையில் சாரல் மழை பெய்தது. சாத்துார், அதனை சுற்றிய பகுதிகளில் மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை மழை பெய்தது.
ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் பகுதிகளில் இரவு 7:00 மணிக்கு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. மாலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.