ADDED : ஜூன் 03, 2024 02:29 AM
சிவகாசி: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, சிவகாசி பெரியகுளம் கண்மாய் கழிவுநீர் தடுப்புக் குளக்கரையில் பசுமை மன்றம், சிவகாசி பட்டய கணக்காளர்கள் சங்கம் சார்பில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஏற்கனவே பெரியகுளம் கண்மாய் வடக்கு கரையில் சிவகாசி இந்திய மருத்துவ சங்கத்தின் டாக்டர்கள் சார்பில் அமைக்கப்பட்ட மியாவாக்கி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளதை தொடர்ந்து, பட்டைய தணிக்கையாளர்கள் சார்பில் பட்டைய தணிக்கையாளர்கள் குறுங்காடு அமைக்கப்பட்டது. 600 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் தணிக்கையாளர்கள், கணக்கர்கள், பசுமை மன்றத்தின் அணியினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.