/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சர்வீஸ் ரோட்டில் தடுப்புகள் இல்லாமல் நான்கு வழிச்சாலை மேம்பாலப்பணிகள் வாகன ஓட்டிகள் உயிருக்கு அபாயம் சர்வீஸ் ரோட்டில் தடுப்புகள் இல்லாமல் நான்கு வழிச்சாலை மேம்பாலப்பணிகள் வாகன ஓட்டிகள் உயிருக்கு அபாயம்
சர்வீஸ் ரோட்டில் தடுப்புகள் இல்லாமல் நான்கு வழிச்சாலை மேம்பாலப்பணிகள் வாகன ஓட்டிகள் உயிருக்கு அபாயம்
சர்வீஸ் ரோட்டில் தடுப்புகள் இல்லாமல் நான்கு வழிச்சாலை மேம்பாலப்பணிகள் வாகன ஓட்டிகள் உயிருக்கு அபாயம்
சர்வீஸ் ரோட்டில் தடுப்புகள் இல்லாமல் நான்கு வழிச்சாலை மேம்பாலப்பணிகள் வாகன ஓட்டிகள் உயிருக்கு அபாயம்
ADDED : செப் 20, 2025 11:28 PM

விருதுநகர்: விருதுநகர் நான்கு வழிச்சாலையில் மேம்பாலப்பணிக்காக அரசு மருத்துவக்கல்லுாரி பஸ் ஸ்டாப் சர்வீஸ் ரோட்டின் அருகே தடுப்புகள் எதுவும் இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் உயிருக்கு பயந்து அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்பு நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது. இதற்காக அரசு மருத்துவக்கல்லுாரி எதிரே மண் கொட்டப்பட்டுள்ளது.
இதனால் சர்வீஸ் ரோட்டை வாகன ஓட்டிகள் இரு வழிப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது ஒரு வாரத்திற்கு முன்பு அரசு மருத்துவக்கல்லுாரி செல்லும் சர்வீஸ் ரோட்டின் பஸ் ஸ்டாப் முன்பும், கல்லுாரி சுற்றுச்சுவர்கள் அருகேயும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்திற்கு அருகே செல்லும் சர்வீஸ் ரோட்டில் பிளாஸ்டிக் சாலை போக்குவரத்து பாதுகாப்பு கூம்பு ஒன்று மட்டும் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் எவ்வித தடுப்புகள் இதுவரை அமைக்கப்படவில்லை. மேலும் சர்வீஸ் ரோடு நான்கு வழிச்சாலையில் இணையும் இடமாக இருப்பதால் தற்போது வாகன போக்குவரத்து நிறைந்து இடமாக மாறியுள்ளது. இதனால் இரவில் டூவீலரில் வாகன ஓட்டிகள் செல்லும் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
எனவே அரசு மருத்துவக்கல்லுாரி பஸ் ஸ்டாப் அருகே சர்வீஸ் ரோட்டில் தோண்டப்பட்ட பள்ளத்திற்கு முறையான தடுப்புகளை வைத்து பணிகளை துவக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.