/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ --அரசு, கல்லுாரி பஸ்கள் உரசியதில் 8 பேர் காயம் --அரசு, கல்லுாரி பஸ்கள் உரசியதில் 8 பேர் காயம்
--அரசு, கல்லுாரி பஸ்கள் உரசியதில் 8 பேர் காயம்
--அரசு, கல்லுாரி பஸ்கள் உரசியதில் 8 பேர் காயம்
--அரசு, கல்லுாரி பஸ்கள் உரசியதில் 8 பேர் காயம்
ADDED : செப் 20, 2025 11:28 PM

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தனியார் கல்லுாரி, அரசு பஸ்க இடையே நிகழ்ந்த சாலை விபத்தில் அரசு பஸ்ஸில் பயணித்த இரண்டு பெண்கள், கல்லூரி பஸ் டிரைவர் படு காயங்களுடனும் மேலும் 5 பேர் காயங்களுடனும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜபாளையத்திலிருந்து விருதுநகர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி பஸ் மாணவர்களை ஏற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு சாயல்குடி ஆறு பாலம் அருகே வளைவில் சென்று கொண்டிருந்தது. அது காலை 7:00 மணிக்கு மம்சாபுரத்தில் இருந்து ராஜபாளையம் வந்த அரசு டவுன் பஸ் மீது உரசியதில் அரசு பஸ்சின் பக்கவாட்டு தகடு முழுவதும் பெயர்ந்து விழுந்தது.
இதில் பஸ்சில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த மில் தொழிலாளர்கள் ஸ்வேதா 21, பிருந்தா 25, செல்வி 40, சீதாலட்சுமி 50, அரசு செவிலியர் அசன் பானு 42, சீனியம்மாள் 40, ராமுத்தாய் 43, காயமடைந்தனர்.
தனியார் கல்லுாரி பஸ் டிரைவர் சேகர் 64, படுகாயத்துடன் மீட்கப்பட்டார். மாணவிகளை ஏற்றிச் செல்ல சென்றதால் கல்லுாரி பஸ் காலியாக இருந்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விபத்தால் ராஜபாளையம் - மதுரை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.