/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கட்டி ஒரு ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத தொட்டி கட்டி ஒரு ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத தொட்டி
கட்டி ஒரு ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத தொட்டி
கட்டி ஒரு ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத தொட்டி
கட்டி ஒரு ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத தொட்டி
ADDED : செப் 20, 2025 11:27 PM

சிவகாசி: சிவகாசி அருகே விளாம்பட்டி ஊராட்சி காமராஜர் காலனியில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் பயன்பாட்டிற்கு வராததால் மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே விளாம்பட்டி ஊராட்சி காமராஜர் காலனியில் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியினருக்கு ஏற்கனவே கட்டப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. ஆனால் இது அனைவருக்கும் போதவில்லை.
இதனால் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வந்தனர். எனவே குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக அப்பகுதியில் ஒரு ஆண்டிற்கு முன்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 8 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
ஆனால் இதுவரையிலும் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. இதே நிலை நீடித்தால் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே தொட்டி சேதம் அடையவும் வாய்ப்பு உள்ளது. இதனால் காமராஜர் காலனி மக்கள் மீண்டும் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். எனவே புதிய தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.