/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழாமுன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா
முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா
ADDED : பிப் 25, 2024 05:57 AM

சிவகாசி : சிவகாசி, திருத்தங்கலில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வர் ஜெ., 76 வது பிறந்த நாளை முன்னிட்டு மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ரத்ததான முகாம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார். ஜெ., வின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிவகாசி சிவன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது. ரத்ததான முகாம் , இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. பின்னர் அவர் பேசியதாவது, தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
தினம் தினம் போராட்டம் நடக்கிறது. பட்டாசு உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர். மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு மதிப்பு உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விருதுநகர்
விருதுநகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழா நகர அ.தி.மு.க., சார்பில் தேசபந்து மைதானத்தில் நடந்தது.
நகர செயலாளர் வெங்கடேஷ், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், நகர மகளிரணி செயலாளர் தனலட்சுமி, அவைத்தலைவர், விஜயகுமரன், முன்னாள் நகர செயலாளர் முகமது, ஓன்றியச்செயலாளர் மச்ச ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். அதன் பின்பு செங்குன்றாபுரத்தில் உள்ள காப்பகத்திற்கு உணவு, ஆமத்துாரில் மக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.