/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசியில் பெண் பட்டாசு தொழிலாளி மர்மச்சாவு சிவகாசியில் பெண் பட்டாசு தொழிலாளி மர்மச்சாவு
சிவகாசியில் பெண் பட்டாசு தொழிலாளி மர்மச்சாவு
சிவகாசியில் பெண் பட்டாசு தொழிலாளி மர்மச்சாவு
சிவகாசியில் பெண் பட்டாசு தொழிலாளி மர்மச்சாவு
ADDED : மார் 26, 2025 07:04 AM
சிவகாசி : சிவகாசி அருகே நாரணாபுரம் காட்டுப்பகுதியில் பெண் பட்டாசு தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகாசி நாரணாபுரம் ரோடு முருகன் காலனியை சேர்ந்தவர் லட்சுமி 55. பட்டாசு தொழிலாளியான இவர் முதல் நாள் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில் நாரணாபுரம் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், லட்சுமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரியவரும், என்றனர்.