Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திறந்தவெளி கழிப்பறை, கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு

திறந்தவெளி கழிப்பறை, கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு

திறந்தவெளி கழிப்பறை, கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு

திறந்தவெளி கழிப்பறை, கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு

ADDED : மார் 26, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
சாத்துார் : சாத்துார் படந்தால் ஊராட்சி மருதுபாண்டியர் நகரில் சாலை ஓரத்தை மக்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்துவதாலும் வைப்பாற்று படுகையில் குளம் போல் சாக்கடை தேங்கி நிற்பதாலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

படந்தால் மருது பாண்டியர் நகரில் வசித்து வரும் குடியிருப்போர்கள் நலச்சங்க உறுப்பினர்கள் சி. கணேசன், டி.எஸ். அய்யப்பன், கார்த்திக், எஸ். சரவணன் வி. சுப்புராஜ், வி. பி. ஜெய் கணேஷ்ஆகியோர் கலந்துரையாடிய போது கூறியதாவது; படந்தால் ஊராட்சியில் பெரும்பாலான தெருக்களில் பேவர் பிளாக் ரோடு உள்ளது . குடிநீரும் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது .ஆனால் சுகாதாரம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.

குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வைப்பாற்றில் நேரடியாக கலப்பதால் ஆற்றில் கழிவு நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதியில் உள்ள போர்வெல்லில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு மாசு அடைந்த நிலையில் வருகிறது. போர்வெல்லில் வரும் தண்ணீர் கருமையாகவும் மிகவும் உப்பாகவும் உள்ளது. இதற்க காரணம் ஆற்றில் கழிவு நீர் சுத்தம் செய்யப்படாமல் கலப்பது தான் போர்வெல்நிலத்தடி நீரும் மாசடைவதற்கு காரணம் என தெரிய வருகிறது.

ஆற்றில் நகராட்சிக்கும் ஊராட்சிக்கும் என தனித்தனியாக உறை கிணறுகள் உள்ளன. தற்போது கழிவுநீர் தேங்கி நிற்பதால் இந்த உறை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் தன்மையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உடல் நலம் பாதித்து நோய் வாய் படுகின்றனர்.மேலும் ஆற்றுப்பகுதியில் குப்பை கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன.இதன் காரணமாக நகர் பகுதியில் கொசுவும் ஈக்களும் அதிகளவில்.

முத்துராமலிங்கபுரம் வசந்தம் நகர் மருதுபாண்டியர் நகர் பகுதியில் வசிக்கும் பலரும் வைப்பாற்று கரையில் அமைந்துள்ள சாலை வழியாக வேலைக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் செல்கின்றனர். மக்கள் நடந்து செல்லும் ரோட்டின் அருகில் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் குப்பை கழிவுகளும் இங்கு தான் கொட்டப்படுகிறது. தொழிலாளர்களும், மாணவர்களும் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். வைப்பாற்றில் அதிகளவு முள்செடிகள் வளர்ந்துள்ளன.

இதனால் ஆற்றின் அழகு பாழடைந்து வருவதுடன் இதில் விஷ பூச்சிகளும் அதிக அளவில் தங்கி விடுவதால் ஆற்றுக்குள் செல்ல மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. திறந்தவெளி கழிப்பறையை ஒழிப்பதற்காக ஊராட்சியில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் மக்கள் இந்த பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத வகையில் பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளனர். இதனால் ரோட்டின் ஓரங்களை மக்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

குடியிருப்பு அருகில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியாகும் கழிவு நீர் ஆற்றில் கலப்பதை தடுத்து சுத்திகரிப்பு செய்த பின்னர் ஆற்றில் விட வேண்டும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. என அவர்கள் கலந்துரையாடினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us