Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அரசு கட்டடங்களாக மாறிய நெல் களம் அபகரிப்பு! ரோட்டோரம் காய வைக்கும் அவலம்

அரசு கட்டடங்களாக மாறிய நெல் களம் அபகரிப்பு! ரோட்டோரம் காய வைக்கும் அவலம்

அரசு கட்டடங்களாக மாறிய நெல் களம் அபகரிப்பு! ரோட்டோரம் காய வைக்கும் அவலம்

அரசு கட்டடங்களாக மாறிய நெல் களம் அபகரிப்பு! ரோட்டோரம் காய வைக்கும் அவலம்

ADDED : ஜன 31, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு விளை பொருள்களை அறுவடை செய்து அதை பிரித்து உலர வைப்பதற்கு கிராமங்கள் தோறும் உலர்களம் உண்டு. இவற்றை தனி நபர்களும், அரசு நிர்வாகத்தினர் பல கிராமங்களில் பல்வேறு துறை கட்டடங்களாக கட்டி உலர்கள் இல்லாத நிலையே உருவாக்கி விட்டனர்.

தற்போது விவசாயம் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில் விளைந்த பயிர்களை உலர வைப்பதற்கும் அடிப்பதற்கும் கூட இடமில்லாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ராஜபாளையம் தென்காசி ரோடு ஒன்றிய அலுவலகம் எதிரே கொண்டனேரி கண்மாய் இதனை அடுத்து கடம்பன் குளம் கண்மாய் அமைந்துள்ளது. மொத்தம் 119 ஏக்கர் நீர் பிடிப்பு பகுதியைக் கொண்ட நீர் நிலையை நம்பி 240 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இதை ஒட்டிய பகுதிகளில் அறுவடை தொடங்கி நெல் அடிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நெல் அடிப்பதற்கும் உலர்த்துவதற்கும் போதிய இடவசதி என்று விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வேறு வழியின்றி தென்காசி தேசிய நெடுஞ்சாலை தனியார் பஸ் டிப்போ அருகே சாலையோரம் எந்திரங்கள் மூலம் நெல்லை பிரித்து காய வைத்து வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன் வரை நெல் உலர்த்தும் களத்தில் கதிர்களை அடித்து காய வைத்து விவசாயிகள் பயனடைந்து வந்த நிலையில் தற்போது களங்கள் அரசு கட்டடங்களாக மாறிப் போனதால் விவசாயிகள் வேறு வழியின்றி சாலையோரம் வெள்ளை காய வைக்கும் நிலை உருவாகியுள்ளது.

சுப்பிரமணியன், விவசாயி: முழுக்க நெல் விவசாயம் நடைபெறும் இப்பகுதியில் இருந்த களம் சிறிது சிறிதாக அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. அவை மகளிர் சுய உதவி குழு பயிற்சி மையம், ஆர்.ஐ., குடியிருப்பு, வணிகவரித்துறை ஒருங்கிணைந்த அலுவலகம், ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம் என அரசே ஆக்கிரமித்து கட்டடங்களாக மாற்றி வைத்துள்ளோம்.

தொடக்கத்தில் இது குறித்து எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் விழிப்புணர்வு இல்லாத நிலையில் தற்போது விவசாயக்களம் உள்ளிட்ட அனைத்து பகுதியும் கண் முன்னே பறிபோய் விட்டது. வேறு வழியின்றி ரோட்டோரத்தை பயன்படுத்தி வருகிறோம், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us