/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரோட்டோர ஆக்கிரமிப்பு, வீதியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்ரோட்டோர ஆக்கிரமிப்பு, வீதியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
ரோட்டோர ஆக்கிரமிப்பு, வீதியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
ரோட்டோர ஆக்கிரமிப்பு, வீதியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
ரோட்டோர ஆக்கிரமிப்பு, வீதியில் தேங்கி நிற்கும் கழிவு நீர்
ADDED : ஜன 31, 2024 12:04 AM

நரிக்குடி : சிறுவயதிலே சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பலர் இறந்துள்ளது, வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வீதிகளில் தேங்கி நிற்பது, வீதிகள், ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்துக்கு இடையூறு, நிழற்குடை தரைதளம் சேதமடைந்து வருவது என பல்வேறு சிரமத்தில் நரிக்குடி பனைக்குடி குடியிருப்போர் உள்ளனர்.
குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் சசிகுமார், கதிரேசன், பாப்பு, முத்து, முருகேசன் கூறியதாவது:
வாறுகால் வசதி சரிவர கிடையாது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இன்றி வீதிகளில் தேங்கி நிற்கிறது. இந்த வழியாகத்தான் மக்கள் நடந்து செல்ல வேண்டும். பெரும்பாலான வீதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. முன்பு வீதிகளுக்குள் வாகனங்கள் சென்று விவசாய விளைபொருட்கள் ஏற்றி செல்ல வசதியாக இருந்தது.
தற்போது மெயின் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி நீண்ட தூரம் நடந்து சென்று, சுமந்து வர வேண்டி இருக்கிறது.. வீதிகளில் போதிய தெரு விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் சில இடங்களில் இருளாக உள்ளது. வீதிகள் சேறும் சகதியுமாக உள்ளன. மழை நேரங்களில் வீதிகள் படுமோசமாக இருப்பதால் நடந்து செல்ல அருவருப்பாக இருக்கிறது.
ேவர் பிளாக் கற்கள் பதிக்க பல முறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. நிழற்குடையில் டூவீலர்கள் நிறுத்துகின்றனர். கால்நடைகள் தங்குவதால், தரை தளம் சேதம் அடைந்து வருகிறது. பயணிகள் மழை, வெயிலுக்கு ஒதுங்க சிரமப்படுகின்றனர்.
கண்மாயில் மறுகால் பாயும் இடத்தில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அங்கு குப்பைகளை கொட்டுவதால் அசுத்தமாக கிடக்கின்றன.
மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளால் ரோடு சுருங்கின. இரு வாகனங்கள் விலகிச் செல்ல முடியவில்லை. போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது. வீதிகள், ரோட்டோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரே ஒரு மேல்நிலைத் தொட்டி உள்ளது. குடிநீர் சப்ளை செய்ய போதுமானதாக இல்லை. கூடுதல் மேல்நிலைத் தொட்டி கட்ட வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சிறுவயதிலேயே பலர் இறந்துள்ளனர்.
குடிநீரை பரிசோதனை செய்ததில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தனர். ஆனால் தொடர்ந்து சிறுநீரக பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. இதனை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், என்றனர். என கேட்டுக் கொண்டனர்.