காதலுக்கு கண் மட்டுமல்ல..வயதுமில்லை..!: 80 வயது முதியவரை கரம் பிடித்த 23 வயது பெண்
காதலுக்கு கண் மட்டுமல்ல..வயதுமில்லை..!: 80 வயது முதியவரை கரம் பிடித்த 23 வயது பெண்
காதலுக்கு கண் மட்டுமல்ல..வயதுமில்லை..!: 80 வயது முதியவரை கரம் பிடித்த 23 வயது பெண்
ADDED : ஜூன் 16, 2024 04:16 PM

பீஜிங்: சீனாவில் 80 வயது முதியவரான லீ என்பவரை 23 வயது இளம்பெண் ஜியாபாங்க் என்பவர் காதலித்து கரம்பிடித்துள்ளார். திருமணத்தின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் வசித்து வருபவர் 80 வயதான முதியவர் லீ. இவர் அங்குள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த நிலையில், அங்கு பணிபுரியும் 23 வயது ஜியாபாங்க் என்ற இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். முதலில் இருவர் இணை பிரியாத நண்பராக இருந்து வந்தனர். திடீரென இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
ஜியாபாங்க் குடும்பத்தினர் முதியவரை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். லீயை திருமணம் செய்து கொள்வதற்காக அவர் தனது பெற்றோருடனான உறவை முறித்து கொண்டார். இதையடுத்து, லீயை இளம்பெண் ஜியாபாங்க் திருமணம் செய்து கொண்டார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடந்துள்ள இந்த திருமணத்தின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. காதலுக்கு கண் மட்டுமல்ல, வயதுமில்லை என பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.