ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கனடா பிரதமர் சொன்னது என்ன?
ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கனடா பிரதமர் சொன்னது என்ன?
ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கனடா பிரதமர் சொன்னது என்ன?
ADDED : ஜூன் 16, 2024 12:03 PM

ரோம் : ‛‛ முக்கிய விவகாரங்களில் இந்தியா உடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளோம்'', என, பிரதமர் மோடி உடனான சந்திப்பிற்கு பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது குற்றம்சாட்டினார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவையும் சந்தித்து பேசியிருந்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: பல்வேறு முக்கிய விவகாரங்களில் இந்தியாவும், கனடாவும் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்கும். அதேவேளையில், அவை என்னென்ன விவகாரங்கள் என்பதை தற்போது கூற மாட்டேன். ஆனால், அது வரும் காலங்களில் மிக முக்கியமான பிரச்னைகளை கையாள்வதில், இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிமொழி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.