/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சிறுவர் பூங்காவில் தேங்கிய மழைநீர் கழிவு நீராக மாறியதால் அதிருப்திசிறுவர் பூங்காவில் தேங்கிய மழைநீர் கழிவு நீராக மாறியதால் அதிருப்தி
சிறுவர் பூங்காவில் தேங்கிய மழைநீர் கழிவு நீராக மாறியதால் அதிருப்தி
சிறுவர் பூங்காவில் தேங்கிய மழைநீர் கழிவு நீராக மாறியதால் அதிருப்தி
சிறுவர் பூங்காவில் தேங்கிய மழைநீர் கழிவு நீராக மாறியதால் அதிருப்தி
ADDED : ஜன 28, 2024 07:06 AM

சிவகாசி : சிவகாசி கட்டளை பட்டி ரோடு ஐயப்பன் காலனி சிறுவர் பூங்காவில் ஒரு மாதமாக மழை நீர் தேங்கி இருப்பதால் சிறுவர்கள், பெரியவர்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியதால் குடியிருப்புவாசிகள் சிரமப்படுகின்றனர்.
சிவகாசி கட்டளை பட்டி ரோடு ஐயப்பன் காலனியில் ஒருங்கிணைந்த குடியிருப்பு, குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் 2009 ல் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு இருக்கை, நடைபாதை, குழந்தைகள், சிறுவர்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளன. பூங்காவில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருக்கும்.
பலரும் நடை பயிற்சி மேற்கொள்ள, ஓய்வு பொழுதை கழிக்க என பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள் விளையாடுவதற்கும் இங்கு வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையில் பூங்கா முழுவதும் மழை நீர் தேங்கி விட்டது. ஒரு மாதமாக தண்ணீர் வெளியே வராததால் முழுவதும் கழிவு நீராக மாறிவிட்டது.
இதில் கொசு உற்பத்தியாகியுள்ளதால் இங்கு வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பூங்காவை சுற்றிலும் வீடுகள் இருப்பதால் குடியிருப்புவாசிகள் கொசு தொல்லையால் அவதிப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் ஏற்படுகிறது.
ஓய்வு பொழுதை கழிப்பவர்களை கொசு பாடாய்ப் படுத்துகிறது. எப்போதுமே பயன்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் கழிவு நீரை வெளியேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.